ஒருவர் தான் செய்தது பாவம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகிவிட்டால் அப்பாவத்தை அவர் செய்யாதவரைப் போன்று ஆகிவிடுகிறார். இவர் திருந்தி விட்டதால் இதற்கு முன் இவர் செய்த பாவங்களை இறைவன் தள்ளுபடி செய்துவிடுகிறான். 4240 ﺣَﺪَّﺛَﻨَﺎﺃَﺣْﻤَﺪُﺑْﻦُ ﺳَﻌِﻴﺪٍﺍﻟﺪَّﺍﺭِﻣِﻲُّ ﺣَﺪَّﺛَﻨَﺎﻣُﺤَﻤَّﺪُﺑْﻦُﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﻗَﺎﺷِﻲُّ ﺣَﺪَّﺛَﻨَﺎﻭُﻫَﻴْﺐُﺑْﻦُ ﺧَﺎﻟِﺪٍﺣَﺪَّﺛَﻨَﺎﻣَﻌْﻤَﺮٌ ﻋَﻦْﻋَﺒْﺪِﺍﻟْﻜَﺮِﻳﻢِﻋَﻦْ ﺃَﺑِﻲﻋُﺒَﻴْﺪَﺓَﺑْﻦِﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِﻋَﻦْﺃَﺑِﻴﻪِﻗَﺎﻝَ ﻗَﺎﻝَﺭَﺳُﻮﻝُﺍﻟﻠَّﻪِﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُﻋَﻠَﻴْﻪِﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟﺘَّﺎﺋِﺐُﻣِﻦْﺍﻟﺬَّﻧْﺐِ ﻛَﻤَﻦْﻟَﺎﺫَﻧْﺐَﻟَﻪُ ﺭﻭﺍﻩﺇﺑﻦﻣﺎﺟﻪ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாவத்திலிருந்து மன்னிப்புக்கோரியவர் பாவமே செய்யாதவனைப் போன்றவர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : இப்னு மாஜா (4240) உங்கள் தந்தை மரணிப்பதற்கு முன்பு தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்களில் ஈடுபட மாட்டேன் என வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதன் பிறகு அவர் கூறியது போல் எந்த இணைவைப்புக் காரியங்களிலும் ஈடுபடாமல்அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருந்தால் அவருக்காக பாவமன்னிப்புத்தேடுவது தவறல்ல.
Onlinepj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக