ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7,10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லைஎன்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா? இறந்தவரின் வீட்டில் போய் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீசும் இல்லை. ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺍﻟْﻌَﻠَﺎﺀِ ﺃَﺧْﺒَﺮَﻧَﺎ ﺍﺑْﻦُ ﺇِﺩْﺭِﻳﺲَ ﺃَﺧْﺒَﺮَﻧَﺎ ﻋَﺎﺻِﻢُ ﺑْﻦُ ﻛُﻠَﻴْﺐٍ ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ ﻋَﻦْ ﺭَﺟُﻞٍ ﻣِﻦْ ﺍﻟْﺄَﻧْﺼَﺎﺭِ ﻗَﺎﻝَ ﺧَﺮَﺟْﻨَﺎ ﻣَﻊَ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻓِﻲ ﺟَﻨَﺎﺯَﺓٍ ﻓَﺮَﺃَﻳْﺖُ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻳُﻮﺻِﻲ ﺍﻟْﺤَﺎﻓِﺮَ ﺃَﻭْﺳِﻊْ ﻣِﻦْ ﻗِﺒَﻞِ ﺭِﺟْﻠَﻴْﻪِ ﺃَﻭْﺳِﻊْ ﻣِﻦْ ﻗِﺒَﻞِ ﺭَﺃْﺳِﻪِ ﻓَﻠَﻤَّﺎ ﺭَﺟَﻊَ ﺍﺳْﺘَﻘْﺒَﻠَﻪُ ﺩَﺍﻋِﻲ ﺍﻣْﺮَﺃَﺓٍ ﻓَﺠَﺎﺀَ ﻭَﺟِﻲﺀَ ﺑِﺎﻟﻄَّﻌَﺎﻡِ ﻓَﻮَﺿَﻊَ ﻳَﺪَﻩُ ﺛُﻢَّ ﻭَﺿَﻊَ ﺍﻟْﻘَﻮْﻡُ ﻓَﺄَﻛَﻠُﻮﺍ ﻓَﻨَﻈَﺮَ ﺁﺑَﺎﺅُﻧَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻠُﻮﻙُ ﻟُﻘْﻤَﺔً ﻓِﻲ ﻓَﻤِﻪِ ﺛُﻢَّ ﻗَﺎﻝَ ﺃَﺟِﺪُ ﻟَﺤْﻢَ ﺷَﺎﺓٍ ﺃُﺧِﺬَﺕْ ﺑِﻐَﻴْﺮِ ﺇِﺫْﻥِ ﺃَﻫْﻠِﻬَﺎ ﻓَﺄَﺭْﺳَﻠَﺖْ ﺍﻟْﻤَﺮْﺃَﺓُ ﻗَﺎﻟَﺖْ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻧِّﻲ ﺃَﺭْﺳَﻠْﺖُ ﺇِﻟَﻰ ﺍﻟْﺒَﻘِﻴﻊِ ﻳَﺸْﺘَﺮِﻱ ﻟِﻲ ﺷَﺎﺓً ﻓَﻠَﻢْ ﺃَﺟِﺪْ ﻓَﺄَﺭْﺳَﻠْﺖُ ﺇِﻟَﻰ ﺟَﺎﺭٍ ﻟِﻲ ﻗَﺪْ ﺍﺷْﺘَﺮَﻯ ﺷَﺎﺓً ﺃَﻥْ ﺃَﺭْﺳِﻞْ ﺇِﻟَﻲَّ ﺑِﻬَﺎ ﺑِﺜَﻤَﻨِﻬَﺎ ﻓَﻠَﻢْ ﻳُﻮﺟَﺪْ ﻓَﺄَﺭْﺳَﻠْﺖُ ﺇِﻟَﻰ ﺍﻣْﺮَﺃَﺗِﻪِ ﻓَﺄَﺭْﺳَﻠَﺖْ ﺇِﻟَﻲَّ ﺑِﻬَﺎ ﻓَﻘَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺃَﻃْﻌِﻤِﻴﻪِ ﺍﻟْﺄُﺳَﺎﺭَﻯ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒருஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது அவர்கள் கப்ருக்கருகில் இருந்துகொண்டு, 'இறந்தவரின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் விசாலமாக்கிக் கொள்' என்று தோண்டக் கூடியவரிடம் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திரும்பும் பொழுதுஒரு பெண்ணின் அழைப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். உணவு கொண்டு வரப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளை அதில் வைத்தார்கள். மக்களும் வைத்தார்கள்; சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கவள உணவைத் தமது வாயில் மெல்லுவதை எங்களுடைய பெற்றோர் பார்த்தனர். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சியைநான் சாப்பிடுகிறேன்' என்றுகூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! எனக்காக ஓர் ஆடு வாங்கி வரும்படி பகீஃ (சந்தை)க்குஆளனுப்பினேன். எனக்கு ஆடு கிடைக்கவில்லை. எனதுஅண்டை வீட்டுக்காரர் ஓர் ஆடு வாங்கியிருந்தார். அதன் கிரையத்தைப் பெற்று ஆட்டைத் தாருங்கள் என்று அவரிடம் ஆளனுப்பினேன். அவர் (வீட்டில்) இல்லை. அதனால் அவரது மனைவியிடம் கேட்டு ஆளனுப்பினேன். அவர் அந்த ஆட்டை அனுப்பி வைத்தார்' என்று அந்தப் பெண் பதில் சொல்லி அனுப்பினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அதைக் கைதிகளுக்குச் சாப்பிடக் கொடு' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்சாரியைச் சேர்ந்த ஒரு மனிதர் நூல்: அபூதாவூத் 2894, பைஹகீ, தாரகுத்னீ. ஒரு பெண் உணவு கொடுத்து அனுப்பினாள் என்றுஇந்த ஹதீஸில் கூறப்படுகின்றது. அந்தப் பெண் இறந்தவரின் மனைவி தான் என்று கூறி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த வீட்டில் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்பிய பெண்,இறந்தவரின் மனைவி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. மேலும் அந்த ஹதீஸில் அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் அழைத்ததாகவே கூறப்படுகிறது. எனவேஇறந்தவரின் குடும்பத்துப் பெண்ணாக அவர் இருக்க முடியாது என்பது இதிலிருந்து உறுதியாகிறது. ﺣﺪﺛﻨﺎ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺇﺳﺤﺎﻕ ﻋﻦ ﺯﺍﺋﺪﺓ ﻋﻦ ﻋﺎﺻﻢ ﺑﻦ ﻛﻠﻴﺐ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﺃﻥ ﺭﺟﻼ ﻣﻦ ﺍﻷﻧﺼﺎﺭ ﺃﺧﺒﺮﻩ ﻗﺎﻝ ﺧﺮﺟﻨﺎ ﻣﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺟﻨﺎﺯﺓ ﻓﻠﻤﺎ ﺭﺟﻌﻨﺎ ﻟﻘﻴﻨﺎ ﺩﺍﻋﻲ ﺍﻣﺮﺃﺓ ﻣﻦ ﻗﺮﻳﺶ ﻓﻘﺎﻝ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺇﻥ ﻓﻼﻧﺔ ﺗﺪﻋﻮﻙ ﻭﻣﻦ ﻣﻌﻚ ﺇﻟﻰ ﻃﻌﺎﻡ ﻓﺎﻧﺼﺮﻑ ﻓﺎﻧﺼﺮﻓﻨﺎ ﻣﻌﻪ ﻓﺠﻠﺴﻨﺎ ﻣﺠﺎﻟﺲ ﺍﻟﻐﻠﻤﺎﻥ ﻣﻦ ﺁﺑﺎﺋﻬﻢ ﺑﻴﻦ ﺃﻳﺪﻳﻬﻢ ﺛﻢ ﺟﻲﺀ ﺑﺎﻟﻄﻌﺎﻡ ﻓﻮﺿﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺪﻩ ﻭﻭﺿﻊ ﺍﻟﻘﻮﻡ ﺃﻳﺪﻳﻬﻢ ﻓﻔﻄﻦ ﻟﻪ ﺍﻟﻘﻮﻡ ﻭﻫﻮ ﻳﻠﻮﻙ ﻟﻘﻤﺘﻪ ﻻ ﻳﺠﻴﺰﻫﺎ ﻓﺮﻓﻌﻮﺍ ﺃﻳﺪﻳﻬﻢ ﻭﻏﻔﻠﻮﺍ ﻋﻨﺎ ﺛﻢ ﺫﻛﺮﻭﺍ ﻓﺄﺧﺬﻭﺍ ﺑﺄﻳﺪﻳﻨﺎ ﻓﺠﻌﻞ ﺍﻟﺮﺟﻞ ﻳﻀﺮﺏ ﺍﻟﻠﻘﻤﺔ ﺑﻴﺪﻩ ﺣﺘﻰ ﺗﺴﻘﻂ ﺛﻢ ﺃﻣﺴﻜﻮﺍ ﺑﺄﻳﺪﻳﻨﺎ ﻳﻨﻈﺮﻭﻥ ﻣﺎ ﻳﺼﻨﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻠﻔﻈﻬﺎ ﻓﺄﻟﻘﺎﻫﺎ ﻓﻘﺎﻝ ﺃﺟﺪ ﻟﺤﻢ ﺷﺎﺓ ﺃﺧﺬﺕ ﺑﻐﻴﺮ ﺇﺫﻥ ﺃﻫﻠﻬﺎ ﻓﻘﺎﻣﺖ ﺍﻟﻤﺮﺃﺓ ﻓﻘﺎﻟﺖ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺇﻧﻪ ﻛﺎﻥ ﻓﻲ ﻧﻔﺴﻲ ﺃﻥ ﺃﺟﻤﻌﻚ ﻭﻣﻦ ﻣﻌﻚ ﻋﻠﻰ ﻃﻌﺎﻡ ﻓﺄﺭﺳﻠﺖ ﺇﻟﻰ ﺍﻟﺒﻘﻴﻊ ﻓﻠﻢ ﺃﺟﺪ ﺷﺎﺓ ﺗﺒﺎﻉ ﻭﻛﺎﻥ ﻋﺎﻣﺮ ﺑﻦ ﺃﺑﻲ ﻭﻗﺎﺹ ﺍﺑﺘﺎﻉ ﺷﺎﺓ ﺃﻣﺲ ﻣﻦ ﺍﻟﺒﻘﻴﻊ ﻓﺄﺭﺳﻠﺖ ﺇﻟﻴﻪ ﺃﻥ ﺍﺑﺘﻐﻲ ﻟﻲ ﺷﺎﺓ ﻓﻲ ﺍﻟﺒﻘﻴﻊ ﻓﻠﻢ ﺗﻮﺟﺪ ﻓﺬﻛﺮ ﻟﻲ ﺃﻧﻚ ﺍﺷﺘﺮﻳﺖ ﺷﺎﺓ ﻓﺄﺭﺳﻞ ﺑﻬﺎ ﺇﻟﻲ ﻓﻠﻢ ﻳﺠﺪﻩ ﺍﻟﺮﺳﻮﻝ ﻭﻭﺟﺪ ﺃﻫﻠﻪ ﻓﺪﻓﻌﻮﻫﺎ ﺇﻟﻰ ﺭﺳﻮﻟﻲ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻃﻌﻤﻮﻫﺎ ﺍﻷﺳﺎﺭﻯ அஹ்மத் (21471) நூலின் அறிவிப்பில் நாங்கள் திரும்பிய போது குரைஷ் குலப் பெண்ணின் அழைப்பாளரைச் சந்தித்தோம் என்று கூறப்படுகிறது. ஜனாஸாவில் பங்கெடுத்து விட்டு திரும்பும் போதுதான் குரைஷ் குலப் பெண் விருந்துக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது., எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, இறந்தவரின் வீட்டில் போய் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்று கூறுவது அபாண்டமாகும். ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும்3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்று ஓதுவதற்கும் இதற்கும்என்ன சம்பந்தம் இருக்கின்றது? இது போன்று சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் கூறுவதிலிருந்தே இவை பித்அத் என்பதை அறிந்து கொள்ளலாம்.
pj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக