'எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ நரகத்தின் ஏழு வாயல்களும் அவரை விட்டு மூடப்பட்டு விடும்' இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206). தப்யீனுல் அஜப் பக்: 18).
ரஜப் போர் புரியாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.' (தப்யீனுல் அஜப், பக்: 17. அல்பவாயிதுல மஜ்மூஆ ஷவ்கானிக்குரயது, பக்: 439).
'ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு, ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.' இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இதில் வரும் ஸக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனக்குறிப்பிடுகிறார்: (தப்யீனுல் அஜப், பக்கம்: 17).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக