புதன், 18 டிசம்பர், 2013
ஒருநாள் தொழுகையில் நாயகம் ஸல் அவர்கள் கூடுதலாகவோ,அல்லது குறைவாகவோ தொழுதார்கள்.தொழுது முடித்தவுடன் மக்கள் சுட்டிக்காட்டினர்கள்.அப்போது நாயகம் அவர்கள் நானும் உங்களை போன்ற மனிதர்தான்.எனவே நான் மறந்துவிட்டால் எனக்கு நினைவூட்டுங்கள்'என்று கூறினார்கள்.
புகாரி401.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ''(எனது மரணத்திற்கு பின் )எனது அடக்க தலத்தை கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கு சிரம் பணிவீரோ? என கேட்டார்கள்.''மாட்டேன்'' என நான் கூறினேன். 'ஆம்'அவ்வாறு செய்யகூடாது. ஒரூ மனிதர் இன்னொரு மனிதருக்கு சிரம் பணியலாம்என்று இருந்தால் கணவனுக்க மனைவியை அவ்வாறு செய்யசொல்லி இருப்பேன்' என்று கூறினார்கள்.
கைஸ் பின் ஸாத் ரலி
அபுதாவூத்1828.
எனது அடக்க தலத்தை வணக்க தலமாக ஆக்கி விடாதே என்று (மக்களுக்கு தெரியும் வகையில்)இறைவனிடம் நபிகள் நாயகம் ஸல் பிராத்தனை செய்தார்கள்.
அகமத் 7054.
யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் இறை தூதர்களின் அடக்க தலங்களை வணக்க தலங்களாக ஆக்கி விட்டனர்.இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தனது மரண படுக்கையில்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
புகாரி436
உலகில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவருக்காக எழ மாட்டோம்.இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்கு காரணம்.
அனஸ் ரலி
அகமத் 12068.
எனது மாமியாகிய உம்முஸ் சுபைரே! எனது மகளாகிய பாத்திமாவே! நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்! எனது சொத்துக்களில் நீங்கள் விரும்பியதை கேளுங்கள்! அல்லாஹ்விடம் இருந்து உங்களை நான் காப்பாற்ற முடியாது'' என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
புகாரி2753.
என்னுடைய தோழர்கள் சிலர் (மறுமையில்)பிடிக்கபடுவர்கள். அப்போது நான் 'என் தோழர்கள்,என் தோழர்கள் என்று நான் கூறுவேன். நீர் அவர்களை பிரிந்தது முதல் அவர்கள் வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார்கள். என்று என்னிடம் கூறப்படும். என நபிகள் நயச்கம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
புகாரி3349.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக