புதன், 6 ஜூலை, 2011
அவ்லியாக்களின் ச��றப்புகளும், தரீக்காக்களும். பி. ஜைன��ல் ஆபிதீன்.
(இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்தஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும்.) புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்றுசுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப்புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின்கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.) ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதுஇஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம். அவ்லியாக்கள், மகான்கள்,நாதாக்கள், பெரியார்கள், தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாது; அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாதுஎன்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாதுஎன்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்றபெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம். இவ்வாறு நாம் கூறுவதால், நாம் அவ்லியாக்களையே அவமதித்து விட்டதாக அலறுகின்றது சமாதிகளை வைத்துப் பிழைப்புநடத்தும் கூட்டம். நம்மை சமூகப் பகிஷ்காரம் செய்யும்படி மக்களைத் தூண்டி விடுகின்றது ஷைகுகளின் காலடியில் சுவர்க்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கூட்டம்.அவர்களைப் போலவே நாமும் அவ்லியாக்களைப் பற்றிஅறிமுகம் செய்ய வேண்டும், அவ்லியாக்களின் சிறப்பைநாமும் பறைசாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்று நாம் முடிவு செய்து விட்டோம். அவர்கள் அவ்லியாக்களைப் பற்றிஅரபுக் கிதாபுகளில் அறிமுகம் செய்து வைத்திருப்பதை பாமர மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால் அதைத் தமிழில் தருவது என்று தீர்மானித்து விட்டோம். இதற்காகஅவர்கள் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். நிர்வாணச் சாமியார். அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர்முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவைசெய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசியஞானம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர்.ஷைகு, முரீது வியாபாரத்திற்கு அதிக அளவுவிளம்பரம் செய்தவர். அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர். இவர் எழுதிய தபகாத் நூல், அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம்.இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளில் நூலகங்களைஇன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபு தெரியாதவர்களும் ரசிக்கவேண்டாமா? என்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமதுசொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபிவாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள்மட்டும் நமது விமர்சனம். அஷ்ஷைகு இப்ராஹீம். அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர்தான் அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி)அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள். (நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157) (குறிப்பு: அவ்லியாக்களின் புகழ்பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த மகானின்(?) வழியில் ஜும்ஆ மேடைகளில், இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று எதிர்பார்ப்போமாக!) இந்தப் பெரியார், பெரியவர்கள் முன்னிலையில் வைத்துக் காற்றை வெளிப்படுத்துவார். (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார். (நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157) (குறிப்பு: இவ்வளவுகீழ்த்தரமாக நடந்தவர் தான் இறைநேசச் செல்வர்களில் ஒருவராம்.இங்குள்ள நிர்வாணச் சாமியார்களுக்குக் கூடஇவர் தான் முன்மாதிரியாக இருக்கக்கூடும். இந்த நிர்வாணச் சாமியாருக்கு ஏற்பட்ட அற்புதத்தைக் கேளுங்கள்.) இந்தப் பெரியாரிடம் எனதுதலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்றபோது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன. இந்தப் பெரியாரைப் பற்றிஅபூ அலீ என்பார் குறிப்பிடும் போது,அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போதுதங்கமாக, வெள்ளியாக அவை மாறும். (குறிப்பு: இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக் கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத்நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள்தான் இவை. பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா ,காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.) அபூ கவ்தா. அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தாஎனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒருபெண்ணையோ, பருவமடையாச் சிறுவனையோ கண்டால்................................... அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும், மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களைஅவர் கவனிக்க மாட்டார். (தபகாத், பாகம்: 2, பக்கம்: 149) குறிப்பு: கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்க! அதைமொழியாக்கமும் செய்யவில்லை. அவ்லியாக்களை மதிக்கும் இலட்சணமும் அவ்லியாக்களின் இலக்கணமும் இது தானா? சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியா? இறை நேசச் செல்வன்? இந்த அவ்லியா பக்தர்கள், ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளைஅழைத்துச் சென்று இது போன்று செய்வ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக