சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும். வைகறைஎனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரைஉண்ணுங்கள்! பருகுங்கள்! அல்குர்ஆன் 2:187 இவ்வசனத்தில் ஃபஜ்ருவரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். ஃபஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பெரும்பாலான முஸ்லிம்களிடம் காணப்படும்அறியாமையைச் சுட்டிக் காட்ட இது பொருத்தமான இடமாகும். தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் சுமார் இரவுமூன்று மணியளவில் ஸஹர் செய்வதற்காக எழுந்து உண்பார்கள். ஸஹர் முடிந்ததும் 3.30 மணியளவில் அல்லதுநான்கு மணியளவில் நிய்யத் செய்வார்கள். (நிய்யத் பற்றிப் பின்னர் விளக்கப்படவுள்ளது.) இவ்வாறுநிய்யத் செய்த பின் ஃபஜ்ரு நேரம் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமோ, அரை மணி நேரமோ மீதமிருக்கும். ஆனாலும்நிய்யத் செய்து விட்டதால் அதன் பிறகு எதையும் உண்ணக் கூடாது, பருகக் கூடாது என்று நினைக்கிறார்கள். இது தவறாகும். எந்தநேரம் முதல் உண்ணக் கூடாது என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டானோ அந்த நேரம் வரை உண்பதற்கு நமக்கு அனுமதியுள்ளது. நாம்நிய்யத் செய்து விட்டால் கூட, எப்போது முதல் நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டானோ அப்போது முதல் நோன்புநோற்கிறேன் என்பது தான் அதன் பொருள். எனவே5.40 மணிக்கு சுபுஹ் வேளை வருகிறது என்றால் மூன்று மணிக்கே நிய்யத் செய்தாலும் 5.40 வரை உண்ணலாம்; பருகலாம்; இல்லறத்திலும் ஈடுபடலாம். இன்னொருஅறியாமையையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம். சுபுஹ்நேரம் 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது என்று வைத்துக் கொள்வோம்.5.29 வரை உண்ணலாம்; பருகலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நோன்பு அட்டவணை என்று வெளியிடப்படும் அட்டைகளில்ஸஹர் முடிவு 5.20 என்றும், சுபுஹ் 5.30 என்று போடும் வழக்கம் உள்ளது. அதாவதுசுபுஹ் நேரம் வருவதற்குப் பத்துநிமிடம் இருக்கும் போதே ஸஹரை முடிக்க வேண்டும் என்று இந்த அட்டவணை கூறுகின்றது. இது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமானதாகும். ஸஹர்முடிவும், சுபுஹ் நேரத்தின் துவக்கமும் ஒன்று தான். ஸஹர் முடிந்த மறு வினாடி சுபுஹ் ஆரம்பமாகி விடும். ஸஹர் முடிவுக்கும், சுபுஹுக்கும் இடைப்பட்ட நேரம் எதுவுமில்லை. எனவேஎப்போது சுபுஹ் நேரம் ஆரம்பமாகிறதோ அதற்கு ஒரு வினாடிக்கு முன்னால் வரைஉண்ணவும் பருகவும் அனுமதி உள்ளது. சுபுஹிலிருந்து நோன்பு ஆரம்பமாகின்றது என்றால் எது வரை நோன்பு நீடிக்கின்றது? பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! அல்குர்ஆன் 2:187 இரவு என்பது சூரியன் மறைந்தவுடன் ஆரம்பமாகிறது. எனவே சூரியன் மறைவது வரை உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியது அவசியம். மார்க்கம்பற்றிய அறிவு இல்லாத சிலர், ரமளான் அல்லாத நாட்களில் பகல் வரை சாப்பிடாமல் இருந்து விட்டு அரை நோன்பு வைக்கும் வழக்கம்உள்ளதாகக் கேள்விப்படுகிறோம். நோன்புஎன்பது சுபுஹ் முதல் மஃக்ரிப் வரை முழுமையாக வைக்க வேண்டுமே தவிர அரை நோன்பு, முக்கால் நோன்பெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது. சூரியன் மறைந்தவுடன் இரவு ஆரம்பமாகி விடுகின்றது. ஆனாலும்சூரியன் மறைந்து ஐந்து நிமிடங்கள் கழித்தே நோன்பு துறக்கும் வழக்கம் பெரும்பாலான ஊர்களில் காணப்படுகின்றது. இதுமுற்றிலும் தவறானதாகும். நோன்பு துறப்பதைப் பத்து நிமிடம் தாமதமாகச் செய்வது பேணுதலான காரியம் என்று இவர்கள் நினைப்பதே இதற்குக் காரணமாகும். சூரியன் மறையும் வரை என்ன? அதற்கு மேலும் என்னால் பட்டினி கிடக்க முடியும் என்று நினைப்பதும், நடப்பதும் ஆணவமான செயலாகத் தான் கருதப்படுமே தவிர பேணுதலாக ஆகாது. இறைவா!நான் பசியைத் தாங்கிக் கொள்ள இயலாத பலவீனன். நீ கட்டளையிட்டதற்காகத் தான் இதைத் தாங்கிக் கொள்கிறேன் என்ற அடக்கமும் பணிவும், விரைந்து நோன்பு துறக்கும் போது தான் ஏற்படும். என்அடியானைப் பாருங்கள்! எப்போது சூரியன் மறையும் என்று காத்திருந்து மறைந்தவுடன் அவசரமாகச் சாப்பிடுகிறான். இவ்வளவுபசியையும் எனக்காகத் தான் இவன் தாங்கிக் கொண்டான் என்று இறைவன் இத்தகைய அடியார்களைத் தான் பாராட்டுவான். இதை நாமாகக் கற்பனை செய்து கூறவில்லை. நபிகள்நாயகம் (ஸல்) அவர்களே இப்படித் தான் நமக்கு வழி காட்டியுள்ளார்கள். நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம்மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி. அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி 1957 இந்தத் திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து, அந்தத்திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி) நூல்: புகாரி 1954 நாங்கள்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன்மறைந்தவுடன் ஒரு மனிதரிடம், போய் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக் கரைசலைக் கொண்டு வருவீராக! என்றார்கள். அதற்குஅம்மனிதர், இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே! என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போய் மாவைக் கரைத்து எடுத்து வருவீராக! என்றார்கள்.இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே! என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்து வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள். அறிவிப்பவர்:இப்னு அபீ அவ்ஃபா (ரலி) நூல்:புகாரி 1941, 1955, 1956, 1958, 5297 இன்னும் பகல் உள்ளதே என்று அம்மனிதர் சுட்டிக் காட்டிய பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. சூரியன் மறையும் நேரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம். நபிகள்நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாத பேணுதலை யார் கண்டுபிடித்தாலும் அதுநமக்குத் தேவையில்லை.
Nonbu-pj
சனி, 30 ஜூலை, 2011
தக்பீர்களுக்கு இ��ையில்....
ஒவ்வொரு தக்பீருக்குமிடையில் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீசும் இல்லை. ஆனால் இன்று நடைமுறையில் தக்பீர் சொல்லும் போதுகைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் தக்பீர் என்ற சொல்லை தக்பீர் கட்டுதல் என்ற அர்த்தத்தில் விளங்கியிருப்பது தான். தஹ்லீல்என்றால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுதல் தஸ்பீஹ்என்றால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல் தஹ்மீத் என்றால் அல்ஹம்துல்லாஹ் என்று சொல்லுதல் எனப் பொருள். இதேபோல் தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று சொல்வது தான் இதன் பொருளாகும். தொழுகைக்குப் பிறகு 33 தடவை தக்பீர் சொல்ல வேண்டும் என்றால் 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்க மாட்டோம். இது போன்று தான் 7+5 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல்என்று பொருள் கொள்ளக் கூடாது. 7+5 தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்பது தான் இதன் பொருள். இந்தக் கூடுதல் தக்பீர்களுக்கு இடையில் ஏதேனும் திக்ருகள் சொல்ல வேண்டும் என்று கூறுகின்றார்கள். சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹுவல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் என்ற திக்ரை தக்பீர்களுக்கிடையில் கூறும்வழக்கம் சில பகுதிகல் இருந்து வருகின்றது. இதற்கும் நபி வழியில் ஆதாரம் இல்லை. இந்த தக்பீர்களுக்கு இடையில் ஓத வேண்டும் என எந்த ஒரு திக்ரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளைக் கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் எனஏழு தடவை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்றுகூற வேண்டும். கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ ஆதாரம் ஏதுமில்லை.
Nonbu-pj
Nonbu-pj
பாங்கு இகாமத் உண்���ா?
நோன்புப் பெருநாலும், ஹஜ் பெருநாலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்கள்: இப்னுஅப்பாஸ் (ரலி), ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 960 முஸ்மில்இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை என்று ஜாபிர் (ரலி)அறிவிக்கின்றார்கள். எனவே பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ இல்லை.
Nonbu-pj
Nonbu-pj
பெருநாள் தொழுகை
பெருநாள் தொழுகையின் அவசியம் பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம்.ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றதுஎன்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். (இதுபின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது) ஜமாஅத்தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகல் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகலேயே தனியாகத் தொழுதுகொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகைவழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும்என்று இஸ்லாம் கூறுகிறது. (இதுவும் பின்னர் விளக்கப்பட்டுள்ளது). மற்றதொழுகைகளை விட அதிக முக்கியத்துவம் அக்கப்பட்டதில் இருந்துஇத்தொழுகையின் அவசியத்தை அறிந்து கொள்ளலாம்.
Nonbu-pj
Nonbu-pj
நோன்பு நோற்கக் கூ���ாத நாட்கள்
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷஅபான் முப்பதாம் இரவா? ரமளானின் முதல் இரவா? என்ற சந்தேகம் ஏற்படும் நாளிலும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். அறிவிப்பவர்:அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி 1197, 1864, 1996 தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் பிறை 11, 12, 13) உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும். நூல்: முஸ்லிம் 1920 (ரமளானா?ஷவ்வாலா? என்று) சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார். அறிவிப்பவர்:அம்மார் பின் யாஸிர் (ரலி) நூல்: திர்மிதி 622
Nonbu-pj
Nonbu-pj
தொடர் நோன்பு நோற்���த் தடை
ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நோற்கப்படும் நோன்பும், நோன்பைத் துறக்காமல் இரவு பகலாக நோற்பதும் விசால் எனப்படுகிறது. நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய தொடர் நோன்புகளை நோற்றுள்ளார்கள். ஆனாலும்நாம் அவ்வாறு நோற்கக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள். அதிகமாகநோன்பு நோற்க ஆசைப்படுபவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இதை விட அதிகமாக நோன்பு நோற்க அனுமதி இல்லை. இதற்கான ஆதாரங்கள் வருமாறு: நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் விசால் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நீங்கள் மட்டும் நோற்கிறீர்களே? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குஅவர்கள், என் இறைவன் எனக்கு உண்ணவும், பருகவும் வழங்குகின்றான் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1962, 1922 ஒவ்வொருமாதமும் மூன்று நோன்பு வைப்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்கூலி கொடுக்கப்படும்! எனவே,இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும் என்றார்கள். என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்ய முடியும் என்று நான் கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டு விடுவீராக! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, என்னால் இதை விடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன் என்று கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக! இது தான் தாவூத் நபியின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே சிறந்ததாகும் என்றார்கள். என்னால் இதை விட சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை விடச் சிறந்தது எதுவும் இல்லை என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்:புகாரி 1976, 1975, 1977
Nonbu-pj
Nonbu-pj
பராஅத் நோன்பு கூட���துபராஅத் நோன்பு ��ூடாது
ஷஅபான் மாதம் 15ம் இரவு அன்று பராஅத் நோன்பு என்ற பெயரில் ஒரு நோன்பு நோற்கும் வழக்கமும் தமிழக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. பராஅத் என்றொரு இரவு உள்ளதற்கும், அன்றையதினம் மூன்று யாஸீன்கள் ஓதி இறந்தவர்களுக்குச் சேர்ப்பதற்கும் ஆதாரம் இல்லை. லைலத்துல் கத்ர் போல் லைலத்துல் பராஅத் என்றொரு இரவு பற்றி ஹதீஸ்களில் கூறப்படவேஇல்லை. எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
Nonbu-pj
Nonbu-pj
நோன்பை முறிக்கும�� செயல்கள்
சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது. நோன்பாளிக்குஇந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும். இவைதவிர நோன்பாளி கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக ஒழுங்குகளும் உள்ளன. அவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாகஇருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057 எதை அல்லாஹ் தேவையில்லை என்று கூறினானோ அதற்கு அல்லாஹ் எந்தக்கூலியையும் தர மாட்டான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை மறந்து விட்டுப் பசியோடும்,தாகத்தோடும் இருப்பதில் பயனேதும் இருக்க முடியாது. பொதுவாகவேபொய்கள், புரட்டுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளில் இருந்துவிலகியிருக்க வேண்டும். ஆனால் நோன்பின் போது கண்டிப்பாக அவற்றிலிருந்து அதிகமாக விலகிக் கொள்ள வேண்டும். நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இவற்றால் நோன்பு முறியாது என்று ஃபத்வாக்கள் அளித்துவந்ததால் தான் முஸ்லிம்களிடம் நோன்புஎந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கொட்டகைகளில் தவம் கிடப்பது, நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது, பொய், புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். பசியோடு இருப்பது மட்டும் தான்இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனர். இந்தஎண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடன் சண்டைக்குவருபவர்களிடம் பதிலுக்குச் சண்டை போட பொதுவாக அனுமதிஉள்ளது. நம்மிடம் எந்த அளவுக்கு ஒருவர் வரம்பு மீறுகிறாரோ அந்த அளவுக்கு வரம்பு மீறவும் அனுமதி இருக்கிறது. நோன்பாளி இந்த அனுமதியைக் கூட பயன்படுத்தக் கூடாதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள். நோன்புநோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் - அறியாமையாக நடந்துகொண்டால், ஏசினால், நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்:புகாரி 1894, 1904, பொதுவாக அனுமதிக்கப்பட்ட சண்டையையேதவிர்த்து விட வேண்டும் என்றால் நோன்பில் எவ்வளவு பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். சாதாரண நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் கிடந்து ஹராமான காட்சிகளைப் பார்ப்பவர்கள் நோன்பு நோற்ற நிலையிலாவது அதிலிருந்து விடுபட வேண்டும்.நமது நோன்பைப் பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நோன்பைமுறித்ததற்குரிய பரிகாரம் நோன்பு நோற்றவர் நோன்பை விடுவதற்குரிய காரணங்கள் ஏதுமின்றி நோன்பை முறித்தால் அதுபெருங்குற்றமாகும். நோன்பு நோற்காதவர்களை விட நோன்பை வேண்டுமென்று முறிப்பவர்கள் கடும் குற்றவாளிகளாவர். இவ்வாறு நோன்பை முறித்தவர் ஒரு நோன்பை முறித்ததற்காக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்குரிய வசதியைப் பெறாதவர்கள் ஒரு நோன்பை முறித்ததற்காக இரண்டுமாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதையும் தொடராக நோற்க வேண்டும். அந்த அளவுக்கு உடலில் வலு இல்லாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நபிகள்நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்றுகேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்றுகேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்திஇருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக! என்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்:புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711 இம்மூன்று பரிகாரங்களில் எதையுமே செய்ய இயலாதவர்கள் எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்றாலும் செய்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். நோன்பு நோற்றுக் கொண்டு உடலுறவு கொள்வது சம்பந்தமாகத் தான்இந்த ஹதீஸில் கூறப்படுகிறது. உண்பதன் மூலமும், பருகுவதன் மூலமும் நோன்பை முறித்தால் இவ்வாறு பரிகாரம் செய்யுமாறு ஹதீஸ்களில் கூறப் படவில்லை. ஆயினும் செய்கின்ற காரியத்தைக் கவனத்தில் கொள்ளாமல் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதே பொருத்தமானதாகும். உடலுறவின் போது எவ்வாறு இறைவனது கட்டளை மீறப்படுகிறதோ அது போல் தான்உண்ணும் போதும் மீறப்படுகிறது. உடலுறவு எப்படி நோன்பை முறிக்குமோ அப்படித் தான்உண்பதும், பருகுவதும் நோன்பை முறிக்கும். இன்னொருகோணத்தி
Nonbu-pj
Nonbu-pj
தஹபள்ளமவு... என்று��ரம்பிக்கும் துஆ
நோன்பு துறந்த பின், தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் எனும் துஆவை ஓதுவது நபிமொழி என்று நாம் கூறி வந்தோம். நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும், கட்டுரைகளிலும், நூல்களிலும் இதைத் தெரிவித்தோம். எதன்அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இந்தச்செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள். இதன்அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன்பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார். ஹாகிம் நூலைமேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள். மேற்கண்டமர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்றுஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம். இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான்ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர் ஆதாரமாகக்கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றிசிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. ஹாகிம்,தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம். மேலும்இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள். ஆனால்ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறுஎன்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை. ஹாகிம்,தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது. மேலும்மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னுஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை. இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், இவர் நம்பகமானவர் என்றுகூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார். இப்னுஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரதுபார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறைகூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது.இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னுஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார். இதைஅனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறுஎந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை. எனவே யாரென்று அறியப்படாத மர்வான்வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல! இதன்அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்ததுஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது. சாப்பிடும் போதுபிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவதுதான் சரியான நடைமுறை ஆகும்.
Nonbu-pj
Nonbu-pj
அல்லாஹும்ம லக்க ச���ம்த்து வஅலா ரிஸ்��ிக்க அஃப்தர்த்து
இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி அபூதாவூத் (2011) முஸன்னஃப்இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511 பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239 ஷுஅபுல் ஈமான் - பைஹகீ 3747 அத்தஃவாத்துல்கபீர் - பைஹகீ (426) அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் - இப்னுல் முபாரக் (1388,1390) அஸ்ஸுனனுஸ்ஸகீர் - பைஹகீ (1102) பழாயிலுல் அவ்காத் - பைஹகீ (141) அல்மராஸில் - அபூதாவூத் (95) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்காத நபர் அறிவிப்பதை நாம் ஏற்கக் கூடாது. எனவே இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது. மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னுஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவேஇப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலைஅறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் மேலும் இச்செய்தி பலவீனமடைகிறது. இதே செய்தி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்மூலம் முஸன்னஃப் அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹுஸைன் பின்அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ என்பவர் அறிவித்துள்ளார். இவர்,அபூஜுஹைஃபா (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), உமரா பின் ருவைபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி), உபைதுல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஹள்ரமீ (ரலி) ஆகிய ஆறு நபித்தோழர்களிடமிருந்தும் உம்முஆஸிம் (ரலி), உம்மு தாரிக் (ரலி) ஆகிய இரண்டு நபித் தோழியர்களிடமிருந்தும் ஹதீஸ்களைஅறிவித்துள்ளார். நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்தச் செய்தியையும் அறிவித்ததாகக் குறிப்பு இல்லை. எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃபசும்து வரஸகனீ வஅஃப்தர்த்து இந்தவாசகம் முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141) ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இச்செய்தியையும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரே அறிவிக்கிறார். நாம்முன்னர் முஆத் பின் ஸஹ்ரா என்பவர் தொடர்பாக கூறிய அனைத்து விமர்சனங்களும் இந்தச் செய்திக்கும் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது. லக்க சும்த்துவலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம் இந்தவாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர் பாகம்: 10, பக்கம்: 292ல் இடம் பெற்றுள்ளது. இதில்இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இவரும்,இவருடைய தந்தையும் பலவீனமானவர்கள் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்றுஇப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது. பிஸ்மில்லாஹிஅல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்தச்செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338லும் அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52லும் கிதாபுத்துஆ பாகம்: 2, பக்கம்: 488லும் அபூநுஐம் அவர்களின் அஹ்பார் உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைஇடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் இடம் பெற்றுள்ளார். ஜவ்ஸஜானீஅவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும், இவர் நம்பகமானவர் இல்லைஎன்று இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும் மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் எனவேஇந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! அல்லாஹும்மலக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்தவாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யாபாகம்: 3, பக்கம்: 408லும், முஸ்னதுல் ஹாரிஸ் பாகம்: 2, பக்கம்: 256லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச்செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார். இவர்ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். நூல்: லிஸானுல் மீஸான் இதைப் போன்று ஐந்தாவது அறிவிப்பாளர் அஸ்ஸரிய்யுபின் காலித் என்பவர் யாரென அறிப்படாதவர் என்று இமாம் தஹபீ தனது மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவேஇந்தச் செய்தியும் பலவீனமடைகிறது. ஆகமொத்தத்தில் அல்லாஹும்ம லக்க சும்து ... எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.
Nonbu-pj
Nonbu-pj
விடுபட்ட நோன்பை க���ாச் செய்வது எப்ப��து?
மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்? இதற்குமார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறுநாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது. ரமளான்மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 1950 ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒருரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள். நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதைநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். விடுபட்டநோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆயினும்மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.
Nonbu-pj
Nonbu-pj
நோயாளிகள்
நோயாளிகளிலும் இரண்டுவகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள். தீரக்கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்குர்ஆன் 2:184 நோயுற்றவர்கள்தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல் அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும். நோன்புவைப்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களின் செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும். இதுதான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள். பயணம்செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்றுகூறியது போல் நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை. தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். இவர்கள்விட்ட நோன்பிற்காக ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நேரடியான ஆதாரம் ஏதுமில்லை. ஆயினும்முதியவர்களின் நிலையுடன் இவர்களது நிலை ஒத்திருப்பதால் இவர்களும் ஏழைக்குஉணவளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் பேணுதலுக்காக இதை ஏற்றுச் செயல்படலாம். Nonbu-pj
செவ்வாய், 26 ஜூலை, 2011
.ரமளான் மாதத்தின் சிறப்புகள்
அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் "ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956) "ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன. இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல! "ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன" என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான். மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும். இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன" என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது. "ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்"என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான். இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். "யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903) இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது. கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம் மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். "ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்" என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119) கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான். யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393) உம்ரா செய்தால் ஹஜ் நன்மை ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும். "ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408) சுவர்க்கத்தில் தனி வாசல் நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது. "சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121) அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம் "நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894) "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904) இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகு
Tntj.ne
Tntj.ne
இரவுத் தொழுகை எத்���னை ரக்அத்கள்?
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும். "ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2157 இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை. இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரீ 990 இரவுத் தொழுகையின் நேரம் இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1340 ரக்அத்களின் எண்ணிக்கை 8+3 ரக்அத்கள் "ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?" என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்" என்று விடையளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?" என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை" என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344 12+1 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402, 10+1 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339 8+5 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341 4+5 ரக்அத்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து "சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?" அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது (சுபுஹத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் : புகாரி (117) 8+5 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341) 9 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)" என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 7 ரக்அத்கள் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)" என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 5,3, 1 ரக்அத்கள் "வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவ
Tntj ne
Tntj ne
இஃதிகாஃபின் சட்ட��்கள்
இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும். நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர். ரமலானில் இஃதிகாப் எதற்காக? ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது. இஃதிகாபின் ஆரம்பம் இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007) ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும். இஃதிகாபின் முடிவு நேரம் இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம். ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம். அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018) நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம். பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை. பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா? நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033) இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். "இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?" என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ (2034) "நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?" என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது. மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம். … நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது… (புகாரீ 2041) நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது. இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித்தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை. இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள் பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187) தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029) இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம். பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா? பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் எ
Tntj.ne
Tntj.ne
.ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர���மம்
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503 ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது. ஃபித்ராவின் நோக்கம் இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும். கொடுக்கும் நேரம் மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509 இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும். பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம். பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, "பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்" என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது. ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்" என்று நான் கூறினேன். அதற்கு அவன் "எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது" எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?" என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்" என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்" என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து "உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்" என்று கூறினேன். "எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்" என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, "உன் கைதி என்ன ஆனான்?" என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். "அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது. "இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை" என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும். ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் 'ரமளான் ஜகாத்' என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும். இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்" என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது. எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது. எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது. ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்ட
Tntj.net
Tntj.net
செவ்வாய், 12 ஜூலை, 2011
இலவச நோட்டு புத்த���ம் வழங்கப்பட்டத�� .
ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 10/7/11 ஞாயிறு அன்று கோட்வீராம்பாளையத்தில் 30 ஏழை மாணவர்களுக்கு சுமார் 6,000 மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது .
இஸ்லாத்தில் பெண்��ளின் நிலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 10/7/11 ஞாயிறு அன்று ஈரோடு சபியுல்லா அவர்கள், இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏழாளமான பெண்கள் கலந்து கொண்டு உறையை கேட்டணர்.
வியாழன், 7 ஜூலை, 2011
நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி(ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான்ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும். இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள்நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்றுசிந்தித்துப் பார்ப்பது கிடையாது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப்புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697) மற்றொரு ஹதீஸில் வருகிறது நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை)ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஹýரைரா (ரலி) நூல் : புகாரி (7280) நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அதுஅல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறுசெய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும்மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது. அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லதுஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்றுஉங்களால் கூறமுடியுமா? நிச்சயமாகஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்றுசிந்தித்துப் பாருங்கள், மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின்உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும். மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்றுஉங்களால் , காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிரவேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாதுஎன நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபிமத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள் ﻭﻛﺬﻟﻚ ﻳﺤﺮﻡ ﺍﻟﺼﻮﻡ ﺑﻌﺪ ﻧﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻟﻤﺎ ﺻﺢ ﻣﻦ ﻗﻮﻟﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫﺍ ﺍﻧﺘﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻓﻼ ﺗﺼﻮﻣﻮﺍ)ﺇﻋﺎﻧﺔ ﺍﻟﻄﺎﻟﺒﻴﻦ ﺝ2 :ﺹ273 : ) ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும்.ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்றுநபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273) மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறுமத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள். ﻭﻣﻦ ﺍﻟﺒﺪﻉ ﺍﻟﻤﺬﻣﻮﻣﺔ ﺍﻟﺘﻲ ﻳﺄﺛﻢ ﻓﺎﻋﻠﻬﺎ ﻭﻳﺠﺐ ﻋﻠﻰ ﻭﻻﺓ ﺍﻷﻣﺮ ﻣﻨﻊ ﻓﺎﻋﻠﻬﺎ ﺻﻼﺓ ﺍﻟﺮﻏﺎﺋﺐ ﺍﺛﻨﺘﺎ ﻋﺸﺮﺓ ﺭﻛﻌﺔ ﺑﻴﻦ ﺍﻟﻌﺸﺎﺀﻳﻦ ﻟﻴﻠﺔ ﺃﻭﻝ ﺟﻤﻌﺔ ﻣﻦ ﺭﺟﺐ ﻭﺻﻼﺓ ﻟﻴﻠﺔ ﻧﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻣﺎﺋﺔ ﺭﻛﻌﺔ)ﺇﻋﺎﻧﺔ ﺍﻟﻄﺎﻟﺒﻴﻦ ﺝ1 :ﺹ270 : ) ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமைஇரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும்.ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறுதொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீதுகடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 ) ﻓﺎﺋﺪﺓ ﺃﻣﺎ ﺍﻟﺼﻼﺓ ﺍﻟﻤﻌﺮﻭﻓﺔ ﻟﻴﻠﺔ ﺍﻟﺮﻏﺎﺋﺐ ﻭﻧﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻭﻳﻮﻡ ﻋﺎﺷﻮﺭﺍﺀ ﻓﺒﺪﻋﺔ ﻗﺒﻴﺤﺔ ﻭﺃﺣﺎﺩﻳﺜﻬﺎ ﻣﻮﺿﻮﻋﺔ)ﻓﺘﺢ ﺍﻟﻤﻌﻴﻦ ﺝ1 :ﺹ270 : ) (ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒருஇரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும், ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றிவரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபிமத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 ) ﻭﺇﺳﺮﺍﺝ ﺍﻟﺴﺮﺝ ﺍﻟﻜﺜﻴﺮﺓ ﻓﻲ ﺍﻟﺴﻜﻚ ﻭﺍﻷﺳﻮﺍﻕ ﻟﻴﻠﺔ ﺍﻟﺒﺮﺍﺀﺓ ﺑﺪﻋﺔ ﻭﻛﺬﺍ ﻓﻲ ﺍﻟﻤﺴﺎﺟﺪ)ﺍﻟﺒﺤﺮ ﺍﻟﺮﺍﺋﻖ ﺝ5 :ﺹ232 : ) பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளைஎரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபிமத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232) அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள்எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம்பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்றுசிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமானகாரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம்பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தேஇவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
tntj.net
tntj.net
நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி(ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான்ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும். இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள்நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்றுசிந்தித்துப் பார்ப்பது கிடையாது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப்புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697) மற்றொரு ஹதீஸில் வருகிறது நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை)ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஹýரைரா (ரலி) நூல் : புகாரி (7280) நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அதுஅல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறுசெய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும்மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது. அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லதுஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்றுஉங்களால் கூறமுடியுமா? நிச்சயமாகஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்றுசிந்தித்துப் பாருங்கள், மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின்உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும். மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்றுஉங்களால் , காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிரவேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாதுஎன நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபிமத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள் ﻭﻛﺬﻟﻚ ﻳﺤﺮﻡ ﺍﻟﺼﻮﻡ ﺑﻌﺪ ﻧﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻟﻤﺎ ﺻﺢ ﻣﻦ ﻗﻮﻟﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫﺍ ﺍﻧﺘﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻓﻼ ﺗﺼﻮﻣﻮﺍ)ﺇﻋﺎﻧﺔ ﺍﻟﻄﺎﻟﺒﻴﻦ ﺝ2 :ﺹ273 : ) ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும்.ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்றுநபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273) மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறுமத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள். ﻭﻣﻦ ﺍﻟﺒﺪﻉ ﺍﻟﻤﺬﻣﻮﻣﺔ ﺍﻟﺘﻲ ﻳﺄﺛﻢ ﻓﺎﻋﻠﻬﺎ ﻭﻳﺠﺐ ﻋﻠﻰ ﻭﻻﺓ ﺍﻷﻣﺮ ﻣﻨﻊ ﻓﺎﻋﻠﻬﺎ ﺻﻼﺓ ﺍﻟﺮﻏﺎﺋﺐ ﺍﺛﻨﺘﺎ ﻋﺸﺮﺓ ﺭﻛﻌﺔ ﺑﻴﻦ ﺍﻟﻌﺸﺎﺀﻳﻦ ﻟﻴﻠﺔ ﺃﻭﻝ ﺟﻤﻌﺔ ﻣﻦ ﺭﺟﺐ ﻭﺻﻼﺓ ﻟﻴﻠﺔ ﻧﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻣﺎﺋﺔ ﺭﻛﻌﺔ)ﺇﻋﺎﻧﺔ ﺍﻟﻄﺎﻟﺒﻴﻦ ﺝ1 :ﺹ270 : ) ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமைஇரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும்.ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறுதொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீதுகடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 ) ﻓﺎﺋﺪﺓ ﺃﻣﺎ ﺍﻟﺼﻼﺓ ﺍﻟﻤﻌﺮﻭﻓﺔ ﻟﻴﻠﺔ ﺍﻟﺮﻏﺎﺋﺐ ﻭﻧﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻭﻳﻮﻡ ﻋﺎﺷﻮﺭﺍﺀ ﻓﺒﺪﻋﺔ ﻗﺒﻴﺤﺔ ﻭﺃﺣﺎﺩﻳﺜﻬﺎ ﻣﻮﺿﻮﻋﺔ)ﻓﺘﺢ ﺍﻟﻤﻌﻴﻦ ﺝ1 :ﺹ270 : ) (ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒருஇரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும், ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றிவரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபிமத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 ) ﻭﺇﺳﺮﺍﺝ ﺍﻟﺴﺮﺝ ﺍﻟﻜﺜﻴﺮﺓ ﻓﻲ ﺍﻟﺴﻜﻚ ﻭﺍﻷﺳﻮﺍﻕ ﻟﻴﻠﺔ ﺍﻟﺒﺮﺍﺀﺓ ﺑﺪﻋﺔ ﻭﻛﺬﺍ ﻓﻲ ﺍﻟﻤﺴﺎﺟﺪ)ﺍﻟﺒﺤﺮ ﺍﻟﺮﺍﺋﻖ ﺝ5 :ﺹ232 : ) பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளைஎரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபிமத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232) அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள்எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம்பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்றுசிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமானகாரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம்பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தேஇவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
புதன், 6 ஜூலை, 2011
அவ்லியாக்களின் ச��றப்புகளும், தரீக்காக்களும். பி. ஜைன��ல் ஆபிதீன்.
(இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்தஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும்.) புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்றுசுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப்புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின்கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.) ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதுஇஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம். அவ்லியாக்கள், மகான்கள்,நாதாக்கள், பெரியார்கள், தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாது; அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாதுஎன்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாதுஎன்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்றபெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம். இவ்வாறு நாம் கூறுவதால், நாம் அவ்லியாக்களையே அவமதித்து விட்டதாக அலறுகின்றது சமாதிகளை வைத்துப் பிழைப்புநடத்தும் கூட்டம். நம்மை சமூகப் பகிஷ்காரம் செய்யும்படி மக்களைத் தூண்டி விடுகின்றது ஷைகுகளின் காலடியில் சுவர்க்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கூட்டம்.அவர்களைப் போலவே நாமும் அவ்லியாக்களைப் பற்றிஅறிமுகம் செய்ய வேண்டும், அவ்லியாக்களின் சிறப்பைநாமும் பறைசாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்று நாம் முடிவு செய்து விட்டோம். அவர்கள் அவ்லியாக்களைப் பற்றிஅரபுக் கிதாபுகளில் அறிமுகம் செய்து வைத்திருப்பதை பாமர மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால் அதைத் தமிழில் தருவது என்று தீர்மானித்து விட்டோம். இதற்காகஅவர்கள் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். நிர்வாணச் சாமியார். அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர்முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவைசெய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசியஞானம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர்.ஷைகு, முரீது வியாபாரத்திற்கு அதிக அளவுவிளம்பரம் செய்தவர். அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர். இவர் எழுதிய தபகாத் நூல், அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம்.இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளில் நூலகங்களைஇன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபு தெரியாதவர்களும் ரசிக்கவேண்டாமா? என்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமதுசொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபிவாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள்மட்டும் நமது விமர்சனம். அஷ்ஷைகு இப்ராஹீம். அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர்தான் அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி)அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள். (நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157) (குறிப்பு: அவ்லியாக்களின் புகழ்பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த மகானின்(?) வழியில் ஜும்ஆ மேடைகளில், இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று எதிர்பார்ப்போமாக!) இந்தப் பெரியார், பெரியவர்கள் முன்னிலையில் வைத்துக் காற்றை வெளிப்படுத்துவார். (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார். (நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157) (குறிப்பு: இவ்வளவுகீழ்த்தரமாக நடந்தவர் தான் இறைநேசச் செல்வர்களில் ஒருவராம்.இங்குள்ள நிர்வாணச் சாமியார்களுக்குக் கூடஇவர் தான் முன்மாதிரியாக இருக்கக்கூடும். இந்த நிர்வாணச் சாமியாருக்கு ஏற்பட்ட அற்புதத்தைக் கேளுங்கள்.) இந்தப் பெரியாரிடம் எனதுதலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்றபோது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன. இந்தப் பெரியாரைப் பற்றிஅபூ அலீ என்பார் குறிப்பிடும் போது,அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போதுதங்கமாக, வெள்ளியாக அவை மாறும். (குறிப்பு: இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக் கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத்நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள்தான் இவை. பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா ,காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.) அபூ கவ்தா. அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தாஎனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒருபெண்ணையோ, பருவமடையாச் சிறுவனையோ கண்டால்................................... அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும், மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களைஅவர் கவனிக்க மாட்டார். (தபகாத், பாகம்: 2, பக்கம்: 149) குறிப்பு: கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்க! அதைமொழியாக்கமும் செய்யவில்லை. அவ்லியாக்களை மதிக்கும் இலட்சணமும் அவ்லியாக்களின் இலக்கணமும் இது தானா? சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியா? இறை நேசச் செல்வன்? இந்த அவ்லியா பக்தர்கள், ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளைஅழைத்துச் சென்று இது போன்று செய்வ
ஆம்புலன்ஸை நாடகத��திற்கு வாடகைக்கு விட்டு பிழைக்கும�� மாமா கட்சி
BEGIN:VBKM
VERSION:1.0
TITLE:Intj
URL;ENCODING=QUOTED-PRINTABLE:rtsp://v5.cache7.c.youtube.com/CkULENy73wIaPA=
lo7kjm3DhfTBMYDSANFEgGUgZ2aWRlb3NyIQG2od7TP1oGUQR3NBDnWQN7DvPB7EI6RNWvHdRsU=
Jxg5gw=3D/0/0/0/video.3gp
LAST-MODIFIED:20110706T074027Z
BEGIN:ENV
X-IRMC-URL;ENCODING=QUOTED-PRINTABLE:=
[InternetShortcut]=
URL=rtsp://v5.cache7.c.youtube.com/CkULENy73wIaPAlo7kjm3DhfTBMYDSANFEgGUgZ=
2aWRlb3NyIQG2od7TP1oGUQR3NBDnWQN7DvPB7EI6RNWvHdRsUJxg5gw=3D/0/0/0/video.3gp=
END:ENV
END:VBKM
காசுக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் கொள்கையைக் கொண்ட மாமா கட்சி தமுமுகவினர் உணர்வு அலுவலகத்தை அபகரிக்க முயன்றுஉலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களாலும், தமிழகத்தில் இருக்கும்மற்றைய முஸ்லிமல்லாத மக்களாலும் காரி உமிழப்பட்டு மானங்கெட்டு நிற்கிறார்கள். அதுபோதாது என்று எப்போது இன்னும் ஒருசர்ச்சையில் சிக்கி நிற்கின்றார்கள் இந்த மாமா கட்சியினர். அவசரத்திற்கு பயன்படும் என்றுதான் பொதுமக்கள் இந்த மாமா கட்சியினரையும் நம்பி காசு கொடுத்து ஆம்புலன்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால்நாங்கள் காசுக்காக எதுவேண்டுமானாலும் செய்வோம் என்று நிருபித்துக்காட்டியுள்ளனர் இந்த மாமா கட்சியினர். தஞ்சை மாவட்டம் பண்டாரவாடையச் சேர்ந்த சலீம் என்பவரின் பொறுப்பில் உள்ள இந்த ஆம்புலன்ஸைத் தான் நாதஸ்வரம் என்ற டிவி நாடகத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறது இந்த மாமாகட்சி. இது குறித்து அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆதிலிடம் விசாரித்தால் இதற்கும்தனக்கும் சம்பந்தம் இல்லைஎன்றும், சலீம் தான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார். சலீமிடம் விசாரித்தால் நான் தலைமையின் ஒப்புதலோடு தான் இதைச் செய்தேன் என்கிறார். வாடகை வாங்கிக் கொண்டு வண்டியை அனுப்புங்கள் என்று தலைமை உத்தரவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்துகள் களைகட்டும் கட்டப்பஞ்சாயத்துக் கழகத்தின் தலைமைக்கழகத்தில் தலாக்வாங்க வேண்டுமா ? அதற்கு வெறும் 5 ஆயிரம் போதும். எந்த வித விசாரணையும் இன்றி தலாக் கிடைத்து விடும். சொத்துப் பிரச்சனைகளுக்கும் இதேநிலைதான். இப்படி இருக்கும் போது மக்கள் பணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸை நாடகத்துக்கு வாடகைக்கு விட்டால் என்ன சினிமாவுக்கு வாடைக்கு விட்டால் என்ன? பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து அந்தப்பணத்தில் இருந்துமக்களின் அவசரத்திற்கு பயன்படட்டும் என அனைத்து தரப்பு மக்களும் மனம் உவந்து ஒரு அமைப்பை நம்பி கொடுத்த ஒருதர்மம் இன்றைக்கு டிவி சீரியலுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.இவர்கள் தங்களை சமுதாயத்தின் காவலர்கள் என்றுகொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கூறிக்கொள்கின்றனர். இந்தபடுகேவலப்பட்ட மாமா கட்சியினரின் வண்டவாளங்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.மக்கள் இவர்களின் சுயரூபங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு இந்த மாமா கட்சியினரை மொத்தமாக அப்புறப்படுத்திட வேண்டும். காசுக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கை கொண்ட இவர்களை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும்.
VERSION:1.0
TITLE:Intj
URL;ENCODING=QUOTED-PRINTABLE:rtsp://v5.cache7.c.youtube.com/CkULENy73wIaPA=
lo7kjm3DhfTBMYDSANFEgGUgZ2aWRlb3NyIQG2od7TP1oGUQR3NBDnWQN7DvPB7EI6RNWvHdRsU=
Jxg5gw=3D/0/0/0/video.3gp
LAST-MODIFIED:20110706T074027Z
BEGIN:ENV
X-IRMC-URL;ENCODING=QUOTED-PRINTABLE:=
[InternetShortcut]=
URL=rtsp://v5.cache7.c.youtube.com/CkULENy73wIaPAlo7kjm3DhfTBMYDSANFEgGUgZ=
2aWRlb3NyIQG2od7TP1oGUQR3NBDnWQN7DvPB7EI6RNWvHdRsUJxg5gw=3D/0/0/0/video.3gp=
END:ENV
END:VBKM
காசுக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் கொள்கையைக் கொண்ட மாமா கட்சி தமுமுகவினர் உணர்வு அலுவலகத்தை அபகரிக்க முயன்றுஉலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களாலும், தமிழகத்தில் இருக்கும்மற்றைய முஸ்லிமல்லாத மக்களாலும் காரி உமிழப்பட்டு மானங்கெட்டு நிற்கிறார்கள். அதுபோதாது என்று எப்போது இன்னும் ஒருசர்ச்சையில் சிக்கி நிற்கின்றார்கள் இந்த மாமா கட்சியினர். அவசரத்திற்கு பயன்படும் என்றுதான் பொதுமக்கள் இந்த மாமா கட்சியினரையும் நம்பி காசு கொடுத்து ஆம்புலன்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால்நாங்கள் காசுக்காக எதுவேண்டுமானாலும் செய்வோம் என்று நிருபித்துக்காட்டியுள்ளனர் இந்த மாமா கட்சியினர். தஞ்சை மாவட்டம் பண்டாரவாடையச் சேர்ந்த சலீம் என்பவரின் பொறுப்பில் உள்ள இந்த ஆம்புலன்ஸைத் தான் நாதஸ்வரம் என்ற டிவி நாடகத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறது இந்த மாமாகட்சி. இது குறித்து அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆதிலிடம் விசாரித்தால் இதற்கும்தனக்கும் சம்பந்தம் இல்லைஎன்றும், சலீம் தான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார். சலீமிடம் விசாரித்தால் நான் தலைமையின் ஒப்புதலோடு தான் இதைச் செய்தேன் என்கிறார். வாடகை வாங்கிக் கொண்டு வண்டியை அனுப்புங்கள் என்று தலைமை உத்தரவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்துகள் களைகட்டும் கட்டப்பஞ்சாயத்துக் கழகத்தின் தலைமைக்கழகத்தில் தலாக்வாங்க வேண்டுமா ? அதற்கு வெறும் 5 ஆயிரம் போதும். எந்த வித விசாரணையும் இன்றி தலாக் கிடைத்து விடும். சொத்துப் பிரச்சனைகளுக்கும் இதேநிலைதான். இப்படி இருக்கும் போது மக்கள் பணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸை நாடகத்துக்கு வாடகைக்கு விட்டால் என்ன சினிமாவுக்கு வாடைக்கு விட்டால் என்ன? பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து அந்தப்பணத்தில் இருந்துமக்களின் அவசரத்திற்கு பயன்படட்டும் என அனைத்து தரப்பு மக்களும் மனம் உவந்து ஒரு அமைப்பை நம்பி கொடுத்த ஒருதர்மம் இன்றைக்கு டிவி சீரியலுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.இவர்கள் தங்களை சமுதாயத்தின் காவலர்கள் என்றுகொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கூறிக்கொள்கின்றனர். இந்தபடுகேவலப்பட்ட மாமா கட்சியினரின் வண்டவாளங்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.மக்கள் இவர்களின் சுயரூபங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு இந்த மாமா கட்சியினரை மொத்தமாக அப்புறப்படுத்திட வேண்டும். காசுக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கை கொண்ட இவர்களை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும்.
சனி, 2 ஜூலை, 2011
மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியா���ிகளுக்கு தடை!
மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ளபுகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம்சமர்பித்துள்ள மனுவில் " இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும்அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை பின்பற்றுபவரே அஹ்மதியாக்கள் அல்லதுகாதியானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின்மத நம்பிக்கை படி முஹம்மதை இறைவனின் இறுதிதூதராகவும் இருதி காலத்தில் இமாம் மஹதி வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் காதியானிகள் மிர்ஸா குலாமை மஹதி என்றும் முஹம்மதுக்குபின் மிர்ஸா குலாமையும் நபியாக நம்புவதால் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அம்ரிஸ்டர் அருகேஉள்ள காதியான் எனும் ஊரில் தலைமையகத்தை வைத்துள்ள அஹமதியாக்களின் ஆன்மிக குருகிலாபத்துல் மஸிஹ் மிர்ஸா மஸ்ரார் அஹ்மது லண்டனில் வசிக்கிறார். 1979-ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அஹமதியாக்கள் முஸ்லீம்கள்அல்லர் என்று எடுத்த தீர்மானத்தை நினைவூட்டி ஹஜ் உம்ராவருபவர்கள் அதற்கான விண்ணப்பத்தில் முஹம்மதை கடைசி இறை தூதராக ஏற்றுகொள்கிறேன் என்று கையொப்பமிட வேண்டும் என்றும் சவூதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
Inneram.com
Inneram.com
சர்வதேச சமூகத்தி��் பிரச்சினைகளுக்���ெல்லாம் காரணம் இ��்ரேலும் அமெரிக்க���வுமே!
"சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்றுஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். "அமெரிக்காவினதும் அதன்துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே இன்று உலகெங்கிலும் உள்ளமக்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்றுகடந்த புதன்கிழமை (29.06.2011) தெஹ்ரானில் இடம்பெற்ற 28ஆவது சர்வதேச திருக்குர்ஆன் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஈரானியஅதிபர் குறிப்பிட்டுள்ளார். "பண்பாடற்ற ஸியோனிஸ சக்திகள் தம்முடைய குறுகிய நோக்கங்களின் பொருட்டுமுழு மனித குலத்தையும் தங்களுடைய சுயநல சடவாத, பொருள் முதல்வாத சித்தாந்தங்கள் எனும்இரும்புச் சக்கரங்களின் கீழிட்டு காலங்காலமாக நசுக்கிவருகின்றன" என்றுஅஹ்மதி நிஜாத் சாடியுள்ளார். "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால்பலஸ்தீன் நிலங்கள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளமை, அமெரிக்கத் தலைமையிலானஆப்கானிய மற்றும் ஈராக்கிய யுத்தங்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை என்பன போன்றதுர்ப்பாக்கிய நிகழ்வுகள் அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்குச் சகாவான இஸ்ரேலும் ஒன்றிணைந்து தம்முடைய காலனித்துவ அடைவுகளுக்காக முழுமனித விழுமியங்களையும் பலிகொடுக்கத்தயாராக உள்ளமையைத் தான் நிரூபித்துள்ளன" என்றுஈரானிய அதிபர் வலியுறுத்தியுள்ளார். "இன்று உலகில் ஒரு குற்றச்செயல், ஊழல், சர்வாதிகாரம் என மனித இனத்தை இழிவுபடுத்தும் எந்தஒன்றையேனும் கடந்துபோக நேர்கையில், அதன் பின்னணியில் ஸியோனிஸ இராச்சியமும் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் இருப்பதைக் கண்டுகொள்ளமுடியும். அவர்கள் எதனைக் காவு கொடுத்தேனும் தம்முடைய சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்வதில்தான் மும்முரமாகஉள்ளனர். அதைத் தவிர, வேறு எதைப் பற்றியும் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை" என்றும் ஈரானிய அதிபர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Inneram.com
Inneram.com
Dhava pani
ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் 01/07/01 அன்று மாற்று மத சகோதரர் s.பண்ணீர் செல்வம் என்பவருக்கு இஸ்லாத்தையும்,நபி வழியையும் விளக்கி கிளையின் சார்பாக திருக்குரான் தமிழாக்கமும், அர்த்தமுள்ள இஸ்லாமும் வழங்கி அவருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கி 'தாவா' செய்யப்பட்டது.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவணுக்கே...!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவணுக்கே...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)